Thursday, April 23, 2009

புனைவின் கலை-1


பேட்டியாளர்:நீங்கள் ஆங்கிலத்தில் வாசித்த முதல் புத்தகம் எது?
ஹாருகி முரகாமி:ரோஸ் மேக் டொனால்டு எழுதிய “தி நேம் ஈஸ் ஆர்ச்சர்”(The name is Archer).அப்புத்தகத்திலிருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.ஒருமுறை வாசிக்கத் தொடங்கிவிட்டால் இடையில் என்னால் நிறுத்த முடியாது.அதே கால கட்டத்தில் டால்ஸ்டாய் மற்றும் தாஸ்தாயெவெஸ்கியையும் வாசிப்பதில் பெருவிருப்பமிருந்தது. நீண்டதும், வாசிக்க வாசிக்க பக்கங்கள் வளரக்கூடியதுமான அப்புத்தகங்களை, வாசிப்பதை என்னால் நிறுத்த முடிவதில்லை.தாஸ்தாயெவெஸ்கியும் ரேமண்ட் சாண்ட்லெரும்(Raymond Chandler) ஒரே தன்மையினராகவே எனக்கு தோன்றுகின்றனர்.இப்போதுகூட என் புனைகதை எழுத்தில் என் தனித்துவமான முயற்சி என்பது தாஸ்தாயெவெஸ்கியையும் சாண்ட்லரையும் ஒன்றிணைத்து ஒரே புத்தகத்தில் கொண்டுவருவதுதான்.அதுதான் என் இலக்கு.

ஆங்கிலத்தில்: ஜான் ரே
தமிழில்: காலபைரவன்
நன்றி: தி பாரிஸ் ரிவிவ்.

No comments:

Post a Comment