Tuesday, May 05, 2009

புன்னகையின் உள்ளர்த்தம்-கவிதை


தான்
ஒரு யானையால்
வன் புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டதை
காவலர்கள் முன்னிலையில்
மீண்டுமொரு முறை கூற வேண்டியிருந்தது
அந்த எரும்புக்கு

சாட்சியம் உள்ளதா
என்ற காவலரிடம்
தன் வயிற்றைக் காட்டி
யானையின் கருவை
தான் சுமந்துகொண்டிருப்பதாக்க் கூறியதும்
சிரிப்பை அடக்க முடியவில்லை அவர்களுக்கு

எல்லா இடங்களிலும்
புன்னகைக்கும் இதழ்களின் இடையே
ஒரு புழுவைப்போல நெளிந்தபடி இருக்கின்றன
சிலரின் பரிதவிப்புகள்.

No comments:

Post a Comment