Tuesday, May 05, 2009

ஆனால் என் கடவுள் இளமையிலேயே இறந்து போனார்


செங்காந்தள் நிறமொத்த
அவள் பின்னால்தான்
அவர் சென்றதாக
மாடவீதி மக்கள் பேசிக்கொண்டனர்

அகாலத்தில் அவர்
அவ்வாறு சென்றது
அதிர்ச்யையேற்படுத்த
மடவிளாகச் சாமியாரை
மண்டியிட்டது
அர்ச்சகர் கூட்டம்

ஊர் என்ன பழிக்குமோ
நாடென்ன பேசுமோவென
அச்சத்தில் இருந்தார்
குரு மகாசன்னிதானம்

திருக்காப்பிட்ட பின்
தேவடியா மகனுக்கு
தெருவில் என்ன வேலையென்று
ஓர் கூட்டம்
கத்திச் சென்றது

கையும் களவுமாக
பிடிபட்டவுடன்
குனிந்த தலை நிமிராது
கருவறை நோக்கிச் சென்றார்
எல்லாம் அறிந்த
இராமநாதீஸ்வரர்

எள்ளும் கொள்ளும் வெடிக்க
ஒருக்களித்து
படுத்துக் கொண்டாள்
உடனுறையும்
ஞானாம்பிகை

மரு நாளிலிருந்து
மடிமீது
அவளை அமரவைத்தபடி
அருள்பாலித்துக் கொண்டிருந்தார்
அவர்
அன்றிலிருந்து தான்
அவருக்கு
சுய இன்பப்பழக்கம்
ஏற்பட்டிருக்குமென
குரு மகாசன்னிதானம்
கூறத்தொடங்கினார்

உடனுறையும்
ஞானாம்பிகைக்கு
எந்தக் கேடும்
இப்போது
இல்லை.

No comments:

Post a Comment