Saturday, August 14, 2010

கொலை-1


எதிர்பார்ப்புகள் பொய்த்துவிட்ட
அந்நாளின்
கடைசி மணித்துளியில்
எல்லாமே நடந்து முடிந்திருக்கும்
ஒரு சிறு குழந்தையின் தாவலென

பரிசீலிக்கப்பட்டிருக்கும்
ஒரு வார்த்தை
மெல்லிய புன்னகை
உயிர்த்துடிப்பானதொரு முத்தம்
நிச்சயம்
எல்லாவற்றையும் தடுத்து நிறுத்தியிருக்குமென
இப்போது யோசிப்பதுதான்
ஆகப் பெரிய வன்முறை

No comments:

Post a Comment